தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டி.கே. சிவகுமார் மகளுக்கு ஆகஸ்ட்டில் நிச்சயதார்த்தம்! - கஃபே டே நிறுவனர் வி.ஜி. சித்தார்த்

பெங்களூரு: காங்கிரஸ் மூத்தத் தலைவர் டி.கே. சிவகுமார் மூத்த மகளுக்கும், மறைந்த கஃபே டே நிறுவனர் வி.ஜி. சித்தார்த்தின் மூத்த மகனுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் மாதம் நடக்கிறது.

DK Shivakumar daughter's engagement Cafe Coffee Day founder Aishwarya's engagement Amartya Hegde டி.கே. சிவகுமார் மகளுக்கு நிச்சயதார்த்தம் கஃபே டே நிறுவனர் வி.ஜி. சித்தார்த் எஸ்.எம். கிருஷ்ணா
DK Shivakumar daughter's engagement Cafe Coffee Day founder Aishwarya's engagement Amartya Hegde டி.கே. சிவகுமார் மகளுக்கு நிச்சயதார்த்தம் கஃபே டே நிறுவனர் வி.ஜி. சித்தார்த் எஸ்.எம். கிருஷ்ணா

By

Published : Jun 16, 2020, 8:22 AM IST

கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவகுமாரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் கஃபே காபி டே நிறுவனர் மறைந்த வி.ஜி. சித்தார்த்தாவின் மூத்த மகன் அமர்த்தியா ஹெக்டேவின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் மாதம் நடைபெறுகிறது.

முன்னதாக, சதாசிவநகரில் உள்ள சிவகுமாரின் இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்ற இரு வீட்டாரின் தாம்பூல பரிமாற்ற சாஸ்திர நிகழ்ச்சியின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து இரு குடும்பங்களின் தலைவர்களும் தாம்பூல தட்டை மாற்றிக் கொண்டு, திருமணத்தை உறுதி செய்தனர். இந்நிகழ்வின் போது ஐஸ்வர்யாவும், அமர்த்தியாவும் மாலைகளையும் மாற்றிக் கொண்டனர்.

எஸ்.எம். கிருஷ்ணாவுடன் இரு வீட்டார்

ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ள நிலையில் நிச்சயதார்த்த தேதி, திருமணம், இடம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. அமர்த்தியா, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் பேரன் ஆவார்.

இதையும் படிங்க: எளிமையாக நடைபெற்ற கேரள முதலமைச்சர் இல்லத் திருமணம்

ABOUT THE AUTHOR

...view details