தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டி.கே.சிவகுமாரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை!

புதுடெல்லி: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் ஜாமீன் மனு மீது இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.

dk shivakumar

By

Published : Oct 15, 2019, 9:56 AM IST


கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், குமாரசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியில் அமைச்சராகவும் இருந்த டி.கே.சிவக்குமார் வீடுகளில் 2017ஆம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் அவரது டெல்லி வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது.

முறைகேடான பணப் பறிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான டி.கே.சிவகுமாரை அமலாக்கத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். 4ஆவது நாள் விசாரணையின் முடிவில், கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி, திகார் சிறையில் சிவகுமார் அடைக்கப்பட்டார்.

சிவக்குமாரின் நீதிமன்றக்காவல் இன்றுடன் முடிகிறது. இதனால், இன்று அவர் மீண்டும் டெல்லி ரோஸ் அவென்யூ அமலாக்கத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதற்கிடையில், டி.கே.சிவக்குமாரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்றைக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வருகிறது.

இதையும் படிங்க:ரெய்டு, விசாரணை எதிரொலி - கர்நாடக முன்னாள் துணை முதலமைச்சரின் உதவியாளர் தற்கொலை!!

ABOUT THE AUTHOR

...view details