தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரேஷன் பொருள்கள் விநியோகம்: ஆசிரியர்களை ஆளுநர் கிரண்பேடி பயன்படுத்துவதாக கல்வித்துறை அமைச்சர் குற்றச்சாட்டு !

புதுச்சேரி : நியாய விலை கடைகளில் பணியாளர்கள் இருந்தும் ஆசிரியர்களை வைத்து உணவுப்பொருள்களை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வழங்க சொல்கிறார் என புதுச்சேரி வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ரேஷன் பொருள்கள் விநியோகம்: ஆளுநர் கிரண்பேடி மீது கல்வித்துறை அமைச்சர் குற்றச்சாட்டு !
ரேஷன் பொருள்கள் விநியோகம்: ஆளுநர் கிரண்பேடி மீது கல்வித்துறை அமைச்சர் குற்றச்சாட்டு !

By

Published : Sep 10, 2020, 12:43 AM IST

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மாத்தூர் அறிவியல் வேளாண் துறை சார்பில் வேளாண் பயிற்சி முகாம் கடந்த மார்ச் மாதம் நடந்தது.

கரோனா பரவல் தடுப்பு காரணமாக பயிற்சி முகாமில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவி பெண்களுக்கு சான்றிதழ் வழக்கும் நிகழ்வு தள்ளிப்போனது.

தற்போது, கரோனா ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து இன்று அந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்ல் கலந்துகொண்ட அமைச்சர் கமலக்கண்ணன் முகாமில் பங்கேற்றவர்களுக்கு சூரிய ஒளியின் மூலம் ஒளிரக்கூடிய அரிக்கன் விளக்கும், சான்றிதழும் பரிசாக வழங்கினார்.

அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், " மத்திய அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கரோனா பாதிப்பு காலத்தில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலத்திலும் நியாய விலை கடையில் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது, புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நியாய விலை கடை இருந்தும், அதில் பணிபுரியும் பணியாளர்கள் இருந்தும் பள்ளி ஆசிரியர்களை இந்த பணியில் பயன்படுத்துகிறார். மேலும், பள்ளி கட்டடத்தில் அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்து அவர்களை பாதுகாக்கும்படி சொல்கிறார்" என குற்றம்சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details