பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தன்னை சந்தித்து அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாஜகாவைச் சேர்ந்த அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், சித்தராமையா இந்த கருத்தை தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “பாஜகவுக்குள் கருத்து வேறுபாடு நிலவுவது என்பது உண்மைதான். இது இன்னமும் தொடரும். பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசல் விவகாரத்தில் நாங்கள் தலையிடுவதில்லை. பாஜக ஆட்சி கர்நாடகாவில் தானாகவே கவிழும். அதை நாம் பார்க்கலாம்.
மூத்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்பட 12க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சமீபத்தில் வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் உமேஷ் கட்டியின் இல்லத்தில் பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.