தமிழ்நாடு

tamil nadu

அஸ்ஸாம் பூர்வகுடிகளுடன் முத்தரப்பு ஒப்பந்தம்!

போடோ பகுதியின் வளர்ச்சிக்கான திட்டங்கள் முழுவதும் போடோக்களிடமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவை மத்திய அரசால் ஒருங்கிணைக்கப்பட்டு நேரடி கண்காணிப்பில் இருக்கும். இதில் மாநில அரசின் பங்கும் கணிசமாக குறைக்கப்படும்.

By

Published : Jan 29, 2020, 8:02 PM IST

Published : Jan 29, 2020, 8:02 PM IST

Monday Tripartite Accord
Monday Tripartite Accord

அது 1998ஆம் ஆண்டு. அஸ்ஸாமில் பணியமர்த்தப்பட்ட இளம் உளவுத்துறை அலுவலர் ஆர். கே. யாதாவ், அங்கு கண்ட காட்சிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டார். அஸ்ஸாம் பூர்வகுடிகளான போடோ இனக்குழுவினருக்கு உளவுத் துறையே பயிற்சியும் ஆயுதங்களையும் வழங்குவதைக் கண்டார். ஆனால், இதற்கு அவரால் வெறும் எதிர்ப்பு மட்டுமே தெரிவிக்க முடிந்தது. உளவுத் துறையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அவர், அஸ்ஸாமில் கண்ட காட்சிகளை விவரித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

அஸ்ஸாமைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் நாகன் சைக்கியாவும், இந்த விவகாரத்தை நாடாளுமன்ற மேலவையில் எழுப்பினார். சைக்கியா 1986-1992 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்தவர். 1990 முதல்1992 வரை மாநிலங்களவை துணைத் தலைவராகவும் இருந்தவர்.

உளவுத் துறையின் இந்தப் பயிற்சியை பெற்ற இளைஞர்கள், பின்நாள்களில் போடோ லிபரேஷன் டைகர்ஸ் (பி.எல்.டி) என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கினர். இவர்கள் IED எனப்படும் குண்டுகளை தயாரிப்பதில் நிபுணத்துவத்துவம் பெற்றவர்கள். அப்போதிலிருந்து, பல போடோ ஆயுதக் குழுக்கள், மேற்கு அஸ்ஸாமில் உருவானது. அவர்கள் சுயாட்சியில் முதல் முழுமையான விடுதலை வரை, பல்வேறு கோரிக்கைகளில் முன்வைத்து போராடினர்.

மங்கோலாய்ட் இனத்தைச் சேர்ந்த போடோ பழங்குடிகள், திபெத்தோ - பர்மிய மொழியை தங்கள் தாய் மொழியாகக் கொண்டவர்கள். இவர்கள்தான் அஸ்ஸாமின் பூர்வகுடிகள். அப்போது வளர்ந்துவந்த அஸ்ஸாம் பிராந்திய அரசியலை நீர்த்துப்போகச் செய்யவே, அரசு போடோ குழுக்களை ஆதரித்தாகவும் குற்றாச்சாட்டுகள் உள்ளன.

வடகிழக்கு இந்தியா

திங்கட்கிழமை கையெழுத்தான ஒப்பந்தம்

ஆனால், திங்களன்று (ஜனவரி 27, 2020), ஆயுதமேந்திப் போராடும் கடைசி போடோ அமைப்புகளில் ஒன்றான தேசிய ஜனநாயக முன்னணி போடோலாந்து (என்.டி.எஃப்.பி) என்ற அமைப்பும் அரசுடன் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

முந்தைய காலங்களில் கையெழுத்தான இரண்டு உடன்படிக்கைகளின் அடுத்தகட்டம்தான் இந்த ஒப்பந்தம் என்று கூறலாம். 1993ஆம் ஆண்டு, ஏ.பி.எஸ்.யு அமைப்புடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், போடோலாந்து தன்னாட்சி கவுன்சில் அமைக்க வழிவகுத்தது. அதேபோல 2003ஆம் ஆண்டு, பி.எல்.டி அமைப்புடன் ஏற்பட்ட ஒப்பந்தம், அதிக அரசியல் அதிகாரங்களைக் கொண்ட போடோலாந்து பிராந்திய கவுன்சில் (பி.டி.சி) என்ற புதிய அமைப்பை உருவாக்க வழிவகுத்தது.

மூன்று தலைமுறைகளாக தொடரும் போடோ பயங்கரவாத அமைப்புகளால், இதுவரை நான்காயிரம் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜனவரி 30ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில், 1,500க்கும் மேற்பட்ட என்.டி.எஃப்.பி. தீவிரவாதிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கவுள்ளனர்.

இதற்கு சில நாள்களுக்கு முன்னர், என்.டி.எஃப்.பி அமைப்பைச் சேர்ந்த ஆயுதமேந்திய உறுப்பினர்கள் மியான்மரிலுள்ள தங்கள் தளங்களிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளனர். இவர்கள் மணிப்பூரில் மோரே மற்றும் நாகாலாந்தில் லாங்வா வழியாக இந்தியா வந்தடைந்தனர்.

முத்தரப்பு ஒப்பந்தம் 1

இந்நிலையில்தான், திங்கள்கிழமைன்று உள் துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் உள் துறை அமைச்சகம், அஸ்ஸாம் அரசு, போடோ குழு ஆகியவைகளுக்கிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. போடோ குழு சார்பில் என்.டி.எஃ.பி., அனைத்து போடோ மாணவர் சங்கம் (ஏ.பி.எஸ்.யு.) யுனைடெட் போடோ மக்கள் அமைப்பு (UBPO) ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் இருந்தனர்.

இதில் போடோ மாணவர் சங்கம் (ஏ.பி.எஸ்.யு.) போடோக்களுக்கு தனி மாநிலம் அமைக்கக்கோரி 1970களின் தொடக்கம் முதல் போராடிவருகிறார்கள். யுனைடெட் போடோ மக்கள் அமைப்பு (UBPO) போடோக்களின் காலாசாரம், பொருளாதாரம் மற்றும் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று போராடிவருகின்றனர். இவர்களுடன் பூரன விடுதலை கோரி போராடும் என்.டி.எஃ.பி. அமைப்பும் இணைந்து திங்களன்று முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்

அஸ்ஸாமின் மிகப் பெரிய பழங்குடி சமூகமான போடோக்கள், பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கிலுள்ள அசாமி மொழி பேசும் மக்களுக்கு எதிராகவும், வங்காள மொழி பேசும் (வங்கதேசத்திலிருந்து குடியேறிய) இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் கருத்துகளை கொண்டிருந்தன. அந்நியப்பட்ட உணர்வைத் தவிர, இவர்களால் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுத்தாகவும் போடோக்கள் கருதினர்.

மேற்கு அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ஏராளமான காலி இடங்கள், கடந்த காலங்களில் பாரம்பரிய சாகுபடியைப் பின்பற்றிய போடோ விவசாயிகளின் விவசாய நிலங்களாக இருந்தன. இந்த நிலங்கள்தான் அண்டை பகுதிகளைச் சேர்ந்த போடோ அல்லாத மக்களை இப்பகுதியை நோக்கி வரவழைத்தது.

முத்தரப்பு ஒப்பந்தம் 2

அப்பகுதியில் இருந்த பழங்குடி மக்களின் கோரிக்கைகளை ஏற்று உருவானதுதான் நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மிசோரம் ஆகிய மாநிலங்கள். இருந்தபேதும் தங்களுக்கென்று தனி இடத்தைக்கோரும் போடோக்களின் கோரிக்கைகள் மட்டும் இன்னும் நிறைவேறவில்லை.

இருப்பினும் போடோ குழுக்களின் பெரும் பலமே அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த வனப்பகுதி. வடகிழக்கு பகுதியை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் 22 கி.மீ பரப்பளவு கொண்ட காட்டில்தான் போடோகள் இருப்பு இருந்தது. இப்பகுதிதான் ‘வடகிழக்கு பகுதிகளின் நுழைவாயில்’ என்று அழைக்கப்படுகிறது.

போடோக்கள் கட்டுப்படுத்திய வனப்பகுதி பூட்டான் வங்கதேசம் போன்ற சர்வதேச எல்லைகளுக்கு மிக அருகில் இருந்தது.

அரசியல் நடைமுறைகள்

2001ஆம் ஆண்டு முதல் போடோக்கள் எப்போதும் மத்தியில் ஆட்சியிலிருந்தவர்களுடன் இணக்கமாக இருந்தனர். இதில் திடீரென்று மாற்றம் ஏற்பட எந்த காரணமும் இல்லை.

2021ஆம் ஆண்டில் அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் (சிஏஏ) மாநிலத்தின் பெரும்பகுதி மக்கள் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம், சுமார் 16 உறுப்பினர்களை சட்டப்பேரவைக்கு அனுப்பும் போடோலாந்து பகுதியில் பாஜகவுக்கு உதவலாம் என்பதே அவர்களின் ஒரே ஆறுதல். அஸ்ஸாமில் மொத்தம் 126 சட்டபேரவை இடங்கள் உள்ளன.

உள் துறை அமைச்சகம

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நெருக்கமான பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார உறவுகளை உருவாக்க மோடி அரசு முக்கியத்துவம் அளித்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில், போடோ கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் உள்ள குழப்பங்களை நீக்குவது அண்டை நாடுகளுடன் சிறந்த உறவுகளை உருவாக்க மேற்கொள்ளப்படும் முதல் நடவடிக்கை.

இந்த ஒப்பந்தம் மத்திய அரசுக்கும் அஸ்ஸாமிற்கும் ஒரு சாதனையாகும். ஏனென்றால் முழு சுயாட்சி கோரும் ஏபிஎஸ்யூ அமைப்பும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.. மறுபுறம், நீண்ட போராட்டத்திற்கு பின், போடோலாந்து தனி மாநில கோரிக்கை நீர்த்துபோகி, அவர்கள் ஒரளவு கவுரவமான ஒப்பந்ததைப் பெறுவது என்பதை காலத்தின் கட்டாயமானது.

திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று கையெழுத்தான போடோ ஒப்பந்தம் பல காரணங்களினால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது முக்கிய சிந்தனைவாதிகளை ஒரே கட்டமைப்பின் கீழ் ஒன்றிணைக்கிறது. இதற்கு முன், ஆயுதமேந்திய குழுக்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் இப்போது மைய நீரோட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்க உள்ளனர் ” என்று ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் மோடி

ஒப்பந்தத்திலுள்ள முக்கிய அம்சங்கள்

போடோக்கள் அல்லாத பகுதிகளில் வசிப்பவர்களின் அரசியல், சமூக மற்றும் கலாசாரங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதால், போடோக்களுக்கு புவியியல் ரீதியாக முக்கிய பகுதியை உருவாக்க இந்த ஒப்பந்தத்தின் விதிகள் முயல்கின்றன. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள போடோலாந்து பிராந்தியத்துக்கு (பி.டி.ஆர்) நிதி ஒதுக்குவதில் மாநில அரசைத் தவிர்த்து, நேரடியாக மத்திய அரசே பணம் ஒதுக்கலாம் என்ற நிலையை உருவாக்குகிறது. இந்த பி.டி.ஆர் அமைப்பில் உள்ள அனைத்து அலுவலர்களின் நியமனங்கள், இடமாற்றங்கள் என அனைத்தையும் அந்த அமைப்பே தீர்மானித்துக்கொள்ளும். நிதி ஒதுக்குவதைத் தவிர, முக்கியமாக நில உரிமைகள், போடோ கலாசாரத்தைப் பாதுகாப்பது, போடோ மொழியை மேம்படுத்துவது என அனைத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

உள் துறை அமைச்சர் அமித ஷா கூறுகையில், "போடோக்களின் பகுதியில் வளர்ச்சி ஏற்பட இந்த ஒப்பந்தம் உதவும். மேலும், அவர்களின் மொழி கலாசாரம் ஆகியவை அஸ்ஸாமின் ஒருமைப்பாட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாக்கப்படும்" என்றார்.

வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், போடோ பகுதியின் வளர்ச்சிக்கான திட்டங்கள் முழுவதும் போடோக்களிடமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவை மத்திய அரசால் ஒருங்கிணைக்கப்பட்டு நேரடி கண்காணிப்பில் இருக்கும். இதில் மாநில அரசின் பங்கும் கணிசமாக குறைக்கப்படும். இவை அனைத்தும் புதிதாக ஒரு மாநிலமோ யூனியன் பிரதேசமோ உருவாக்கப்படாமல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பரபரப்பாகும் டெல்லி அரசியல் களம்!

ABOUT THE AUTHOR

...view details