தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஒளி ஏற்றி இருளை விலக்குவோம்'- வெங்கையா நாயுடு! - 'ஒளி ஏற்றி இருளை விலக்குவோம்'- வெங்கையா நாயுடு!

டெல்லி: அனைவரும் ஒன்றிணைந்து ஒளியேற்றி கோவிட்-19 இருளை அகற்றுவோம் என குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

COVID-19  lighting lamps  M. Venkaiah Naidu  PM Modi  9pm9min  light candle  'ஒளி ஏற்றி இருளை விலக்குவோம்'- வெங்கையா நாயுடு!  அகல் விளக்கு, மெழுகு வர்த்தி, ஏப்ரல் 5ஆம் தேதி
COVID-19 lighting lamps M. Venkaiah Naidu PM Modi 9pm9min light candle 'ஒளி ஏற்றி இருளை விலக்குவோம்'- வெங்கையா நாயுடு! அகல் விளக்கு, மெழுகு வர்த்தி, ஏப்ரல் 5ஆம் தேதி

By

Published : Apr 5, 2020, 8:01 PM IST

குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு தனது தொடர்ச்சியான ட்வீட்களில், “நாட்டு மக்கள் அனைவரும் ஒளியேற்றி இருள் அகற்றுவோம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அன்புள்ள சக குடிமக்களே.. நாம் கோவிட்-19 ஐை ஒன்றாக எதிர்த்துப் போராடுகிறோம்.

இந்தச் சவாலின் தீவிரத் தன்மையைக் கண்டு நாம் கவலைப்படக்கூடாது. நம்பிக்கையின் வெளிச்சத்தையும், அறிவின் வெளிச்சத்தையும், பிரகாசத்தையும் பரப்புவதன் மூலம் இருள் மற்றும் சந்தேகங்களை நீக்குவோம்.

வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில், ஒற்றுமையை வெளிப்படுத்துவோம். கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட இருளை அகற்றுவதில் இந்தியாவின் 130 கோடி மக்கள் ஒன்றிணைந்துள்ளனர் என்பதைக் காட்டுவோம். கோவிட்-19 தொற்று நோயிலிருந்து அனைவரின் நல்ல ஆரோக்கியத்துக்காகவும், செழிப்புக்காகவும் ஜெபிப்போம்” என கூறியுள்ளார்.

ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். அனைவரும் சமூக விலகல், தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் கோவிட்-19 பரவுவதைத் தடுக்க அலுவலர்கள், சுகாதார வல்லுநர்கள் அளித்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 5ஆம் தேதி (அதாவது இன்று) பிரதமர் நரேந்திர மோடி இரவு 9 மணியளவில் 9 நிமிடங்கள் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி ஏற்ற கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details