கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாடு பொது சுகாதாரம், பொருளாதார நெருக்கடிக்கு ஆழ்ந்து செல்லும்போது, மாநில அரசுகள் தொழிலாளர்களின் சட்ட உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகின்றன. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்கள் தொழிலாளர் சட்டங்களின் வரம்பை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளன.
இந்தச் 'சீர்த்திருத்தங்கள்' தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வணிகங்களை குறைந்தபட்ச விதிமுறைகள், பணிநீக்கங்கள், தொழில் பாதுகாப்பு, பணியிடங்களில் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பல பாதுகாப்பு விதிமுறைகளிலிருந்து விலக்கு அளித்துவிட்டு, அதன்மூலம் முதலீட்டை ஈர்க்கப் பார்க்கின்றன.
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களும் தொழிலாளர் ஒழுங்குமுறைகளை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் நீட்டிக்கப்பட்ட வேலை நேரத்தின் வடிவில் விரிவான திட்டத்தை அறிவித்துள்ளன. மேலும் சில மாநிலங்களும் இதைப் பின்பற்றக்கூடும்.
தொழிலாளர் சட்டங்களில் மிகவும் தீவிரமான மாற்றங்கள் உத்தரப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, பல தொழிலாளர் சட்டங்களுக்கு தற்காலிக விலக்கு அளித்துள்ளது. இந்தத் தற்காலிக விலக்கு, மூன்று ஆண்டுகள் தொடரும், இதுமட்டுமின்றி அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் முற்றிலும் நிறுத்திவைக்கிறது.
அதன்படி, “கட்டட, பிற கட்டுமான தொழிலாளர்கள் சட்டம் 1996, தொழிலாளர்கள் இழப்பீட்டுச் சட்டம் 1923, முறைசாரா தொழிலாளர் அமைப்புச் (ஒழிப்பு) சட்டம் 1976, ஊதிய கொடுப்பனவுச் சட்டம் 1936இன் பிரிவு ஐந்து ஆகியவை தக்கவைக்கப்பட்டுள்ள ஒரே தொழிலாளர் சட்டங்கள் ஆகும்.
எவ்வாறாயினும், குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948, தொழில்துறை சச்சரவு (தகராறு) சட்டம் 1947, தொழிற்சாலைகள் சட்டம் 1948, பணி நிலைமைகளை ஒழுங்குப்படுத்தும் சுமார் 30 தொழிலாளர் சட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
உத்தரப் பிரதேசத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களும் தொழிலாளர் சட்டங்களின் முக்கிய விதிகளை மீறுகின்றன. இந்த நடவடிக்கைகள் வணிகங்கள் விருப்பப்படி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும், பணிநீக்கம் செய்யவும் அனுமதிக்கின்றன.
தற்போதுள்ள பாதுகாப்பு, சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதிலிருந்து புதிய நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கின்றன. மேலும், நிறுவனங்கள் அதிக வேலை நேரத்தை விதிக்கவும் அனுமதிக்கின்றன.
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களும் வேலை நேரத்தை ஒரு நாளைக்கு 8 முதல் 12 மணி நேரம் வரை நீட்டித்துள்ளன.
இந்த மாநிலங்களில் உள்ள முதலாளிகள் தொழிலாளர்களுக்கு கூடுதல் நேர ஊதியத்தை வழங்க வேண்டும். தொழிலாளர் சட்டங்களை நீர்த்துப்போகச் செய்வது, குறிப்பாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அவை மொத்தமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பது தொழிற்சங்கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சி.ஐ.டி.யு.) இதனை, "உண்மையில் நாட்டிற்கு செல்வத்தை உருவாக்கும் வகையில், உழைக்கும் மக்கள் மீது அடிமைத்தனத்தின் நிபந்தனைகளை சுமத்துவதற்கான காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை" என்று கூறியுள்ளது.
கரோனா வைரஸ் நெருக்கடியை "மனித உரிமைகளை நசுக்குவதற்கும், பாதுகாப்பற்ற பணியிடங்களுக்கு அனுமதி வழங்குவதற்கும், தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கும், அவர்களின் குரலை அடக்குவதற்கும் பயன்படுத்தக் கூடாது” என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்), பாஜகவுடன் இணைந்த பாரதிய மஜ்தூர் சங்கம்கூட இந்த முடிவுகளை விமர்சித்துள்ளன. இந்த மாநிலங்களால், தொழிலாளர் சட்டங்களை இடைநிறுத்துவது கடுமையான அரசியலமைப்பு, சட்ட கேள்விகளை எழுப்பியுள்ளது. இது அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் 3(III)ஆவது பிரிவில் வருகிறது.
ஆக, தொழிற்சங்கம், மாநிலங்கள் இரண்டுமே இந்த விஷயத்தில் சட்டங்களை உருவாக்க முடியும். தற்போது மத்தியில் 44 சட்டங்களும், மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட சட்டங்களும் தொழிலாளர்களுக்கு உள்ளன.