தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 10, 2021, 1:52 PM IST

ETV Bharat / bharat

உயர்மட்ட குழு ஆலோசனைக்காக டெல்லி புறப்பட்ட எடியூரப்பா

அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று டெல்லி புறப்பட்டுள்ளார்.

BSY to discuss cabinet expansion , candidate selection for by-election with high command
BSY to discuss cabinet expansion , candidate selection for by-election with high command

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா, அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசிக்க உயர்மட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்க இன்று டெல்லி புறப்பட்டார்.

அதற்கு முன்னதாக பேசிய அவர், உயர்மட்ட நிர்வாகிகள் அழைப்பின் பேரில் டெல்லிக்குச் செல்கிறேன். பசவ கல்யாணா, மஸ்கி சட்டப்பேரவை மற்றும் பெல்காவி மக்களவைத் இடைத்தேர்தல் வேட்பாளர்கள் குறித்து அதில் ஆலோசிக்கப்படும். அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் கலந்துரையாடவுள்ளேன்.

இந்த வாரத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுமா என்பது உயர்மட்ட குழுவின் முடிவைப் பொறுத்தே அமையும். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அவர் அப்போது கூறினார்.

முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம், அமைச்சரவை விரிவாக்கத்திற்காக நடைபெற்ற உயர் மட்ட நிர்வாகிகள் கூட்டம் தோல்வியில் முடிந்ததையடுத்து, தற்போது எடியூரப்பா மீண்டும் டெல்லி செல்கிறார். இது அவருக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: 'அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மத்திய பாஜக தலைமை முடிவு செய்யும்' - முதலமைச்சர் எடியூரப்பா

ABOUT THE AUTHOR

...view details