தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கச்சா எண்ணெய் விலை சரிவை சாதகமாக பயன்படுத்துமா இந்தியா?

டெல்லி: வரலாற்றில் இல்லாத வகையில் கச்சா எண்ணெய்யின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்தச் சூழலை இந்தியா எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என பெட்ரோலியத் துறை முன்னாள் செயலர் எஸ்சி திரிபாதியுடன், ஈடிவி பாரத் செய்தியாளர் கிருஷ்ணானந்த் திரிபாதி நடத்திய நேர்காணலின் தமிழாக்கம் இதோ...

oil
oil

By

Published : Apr 22, 2020, 5:53 PM IST

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துவரும் நிலையில், இதை இந்தியா முறையாகப் பயன்படுத்தி தேவையான அளவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி மேற்கொண்டு சேமிக்க வேண்டும். எதிர்காலத்தில் சரிவு ஏற்படும்பட்சத்தில் இந்த கையிருப்பு தேவையான நேரத்தில் கைகொடுக்கும்.

பல்வேறு காரணிகளால் வெஸ்ட் டெக்ஸாஸ் இன்டர்மீடியேட் என்ற அமெரிக்காவின் எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த விலைச் சரிவானது பூஜ்ஜியத்திற்கும் கீழ் குறைந்து -36.73 டாலருக்குச் சென்றது. இந்த நெருக்கடியான சூழலில் போக்குவரத்திற்கும், சேமிப்பிற்கும் கூடுதல் விலை ஏற்படுவதால், விற்பனைதாரர்கள் குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய முன்வந்துள்ளனர்.

இத்தகைய கடும் வீழ்ச்சியை கச்சா எண்ணெய் அமெரிக்காவில் சந்தித்தாலும், பிரெட் கச்சா எண்ணெய் சந்தை மதிப்பான 25 டாலர் தொகையைக் கொண்டுதான் இந்திய சந்தைகள் கொள்முதல் மேற்கொள்ளும். இந்த 25 டாலர் தொகை என்பது முன்பைக்காட்டிலும் குறைந்த அளவு. இதே நிலைதான் வரும் ஜூன் 25ஆம் தேதிவரைத் தொடரும் எனத் தெரிகிறது.

இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு எதிர்காலத்தேவைக்காக இந்தியா கச்சா எண்ணெய் சேமிப்பை மேற்கொள்வது காலத்தின் தேவை என துறை சார் வல்லுநர் எஸ்.சி திரிபாதி தெரிவிக்கின்றார். இந்தியாவின் இருப்பானது தற்போதைய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், விற்பனை நிறுவனங்களின் அளவைக்காட்டிலும் 3 கோடி டன் கூடுதலாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போதைய நிலையில் இந்த சேமிப்பு இலக்கு எட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே உள்ளது. மங்களூரில் உள்ள சேமிப்பு தளமும், விசாகப்பட்டினத்தில் உள்ள சேமிப்பு தளத்தையும் சேர்த்தால் சேமிப்பு திறன் 53 லட்சம் டன் உள்ளது. இது இந்தியாவின் 10 நாள் தேவைகளையே பூர்த்தி செய்யும்.

தற்போது புதிதாக 60 லட்சம் டன் திறன் கொண்ட சேமிப்புக் கிடங்குகள் ஒடிசா மற்றும் கர்நாடகாவில் உருவாக்கப்பட்டுவருகிறது.

இந்தியாவில் கச்ச எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உருவாக்குவது சவாலான பணிதான் என்றாலும் காலத்தின் தேவைக்கேற்ப மேம்படுத்திக்கொள்வது அவசியம். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் வழியை பின்பற்றி எதிர்காலத் தேவைக்கான சேமிப்பு முக்கியமாகும்.

உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு கிடங்கான அமெரிக்காவில் உள்ள ஸ்டேடிஜிக் பெட்ரோலியம் ரிசர்வ் எனப்படும் எஸ்.பி.ஆர் சுமார் 70 கோடி டன் பாரல்களை சேமித்து வைக்கும் திறன் கொண்டது.

தற்போது அமெரிக்காவில் கரோனா பாதிப்பு காரணமாக அதிபர் ட்ரம்ப் தொடர்ச்சியாக செய்தியாளர் சந்திப்பு நடத்திவரும் நிலையில், சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், அமெரிக்காவின் தேவைக்காக கூடுதலாக 7.5 கோடி பாரல் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய அமெரிக்க காங்கிரசுக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட்டுள்ளார். எண்ணெய் வாங்குவதற்கு இது சரியான நேரமாகும் என்கிறது அமெரிக்கத் தலைமை. இவ்வாறு எஸ்சி திரிபாதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சீனாவின் பரப்புரை கருவியாகும் உலக சுகாதார அமைப்பு?

ABOUT THE AUTHOR

...view details