கேரளாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடலை மத்திய அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளின் படி அடக்கம் செய்ய கேரளாவிலுள்ள லத்தீன் கத்தோலிக்க தேவாலயம் முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் நெறிமுறைகளை பின்பற்ற தேவாலயம் முடிவு செய்துள்ள அதே நேரத்தில், மதச்சடங்குகளுக்கு உட்பட்டே உயிரிழந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்படும் என அனப்பரம்பில் மறை மாவட்ட ஆயர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் லத்தீன் தேவாலயத்திற்கு கீழுள்ள அனைத்து திருச்சபைகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் படி நேற்று (ஜூலை 28) ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆலப்புழா மாவட்டம் நீர்த்தேக்கத்தில் பிற பிரச்னைகள் இருப்பதால் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவது குறித்து மறைமாவட்ட ஆயர், மற்ற பாதிரியார்கள், தேவாலய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்துவருகிறார்.