தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராமரின் பக்தர் காந்தி - காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங் - நாதுராம் கோட்சே

மகாத்மா காந்தி கடவுள் ராமரின் மிகப்பெரிய பக்தர் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங்
காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங்

By

Published : Jan 12, 2021, 12:55 PM IST

போபால்:மகாத்மா காந்தி கடவுள் ராமரின் மிகப்பெரிய பக்தர் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்திலுள்ள மோகன்கேடா பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் இளைஞரணி முகாமில் பங்கேற்ற அவர், " கோட்சேவின் கொள்ளைகள் குறித்துதான் அனைத்து விவாதங்களும் தொடர்கின்றன.

காந்தியைக் காட்டிலும் மிகப்பெரிய தேசபக்தர் வேறு யாரும் இருக்க முடியாது. இந்து மதத்தைப் பின்பற்றிய மகாத்மா காந்தி, ராமரின் மிகப்பெரிய பக்தராக இருந்தார். அவர் உயிரிழக்கும் தருவாயிலும்கூட ராமரை அவர் நினைவுகூர்ந்தார்" என்றார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அம்மாநிலத்தின் குவாலியர் நகரில் மகாத்மா காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் பெயரில் கல்வி மையம் ஒன்றை அகில பாரதிய இந்து மகாசபா அமைப்பு தொடங்கியது

இதையும் படிங்க:கோட்சேவின் செயலை இந்து மகாசபா என்றும் ஆதரிக்கும்’

ABOUT THE AUTHOR

...view details