தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பணமில்லா பரிவர்த்தனை அதிகாரிப்பு - transaction

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு பணமில்லா பரிவர்த்தனை அதிகாரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பணமில்லா பரிவர்த்தனை

By

Published : Jun 10, 2019, 8:07 PM IST

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் பணமில்லா பரிவர்த்தனை 50% அதிகரித்துள்ளதாகவும், சில்லறை விற்பனைகளுக்கும் பணமில்லா பரிவர்த்தனையை அதிகமாக மக்கள் பயன்படுத்துகின்றனர் எனவும், கடந்த சில வருடங்களை விட தற்போது டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், 2012ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி 331.60 மில்லியன் டெபிட் கார்டுகளும், 19.55 மில்லியன் கிரெடிட் கார்டுகளும் மக்களால் பயன்படுத்தப்பட்டன. இதேபோல், 2017ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி 861.7 மில்லியன் டெபிட் கார்டுகளும், 37.49 மில்லியன் கிரெடிட் கார்டுகளும் மக்களால் பயன்படுத்தப்பட்டன என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தற்போது 2019ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி பணமில்லா பரிவர்த்தனை அதிகரித்ததன் காரணமாக 925 மில்லியன் டெபிட் கார்டுகளும், 47 மில்லியன் கிரெடிட் கார்டுகளும் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details