தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் கரோனா இருப்பவர்களை கண்டறிவதில் சிரமம் - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் - Difficulty in detecting coronavirus in Puducherry

புதுச்சேரி: கரோனா தொற்று இருப்பவர்களை கண்டறிவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று இருப்பவர்களை கண்டறிவதில் சிரமம்
கரோனா தொற்று இருப்பவர்களை கண்டறிவதில் சிரமம்

By

Published : May 25, 2020, 3:21 PM IST

புதுச்சேரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, "புதுச்சேரியில் 31 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 6,535 பேருக்கு உமிழ் நீர் சோதனை நடத்தியதில் 6,444 பேருக்கு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து நாட்களாக புதுச்சேரி எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, புதுச்சேரிக்கு 4,090 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளனர்.

அவர்களை மாநில சுகாதாரத்துறை பணியாளர்கள் தீவிரமாக மருத்துவ ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களில், சிலருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் உள்ள கிராமப் பகுதிகளில் கரோனா தொற்றை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: தனியார் மயமாக்கம் ஜனநாயகத்துக்கு அழகல்ல - புதுச்சேரி முதலமைச்சர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details