புதுச்சேரி அலுவலகம் முன்பு குவிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஊதியத்துடன் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்ப வழிவகை செய்ய வேண்டும், புதுச்சேரியில் அரசு மதுபானக் கடைகளை திறந்து வருமானம் ஈட்டுவதற்கு பதிலாக வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் தலைமையேற்றார். அவருடன் மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன், கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அதேபோல புதுச்சேரியில் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்த காங்கிரஸ் அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில மதிமுகவினர் பெரியார் சிலை முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு புதுச்சேரி மதிமுக பொறுப்புக்குழு உறுப்பினர் கலைவாணன் தலைமையேற்றார். அந்த ஆர்ப்பட்டத்தில் மதிமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மாசிலாமணி, ராஜசேகரன், ஜான், சந்துரு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் புதுச்சேரி மாநில ஆளுங்கட்சியான காங்கிரஸுடன் மதிமுக கூட்டணியிலிருப்பது குறிப்பிடத்தக்கது.
மதுக்கடைகளுக்கு பதிலாக வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் - Marxist Leninist Party
புதுச்சேரி: வருமானத்துக்காக அரசு மதுபானக் கடைகளை திறப்பதற்கு பதிலாக வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Communist Party of India
இதையும் படிங்க:புதுச்சேரி மாநில சுகாதாரத்துறைக்கு 100 கோடி தேவை!