புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று (ஜனவரி 13) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, தொடர்ந்து 25 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய ஏனாம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், யூனியன் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவுக்கு விரைவில் சட்டப்பேரவையில் பாராட்டு விழா நடத்த இருக்கிறோம்.
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்தாரா? முதலமைச்சர் விளக்கம் - Malladi Krishna Rao resign
புதுச்சேரி: சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விளக்கம் அளித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் உண்மையில்லை. உறுதிபடுத்தாத தகவலை ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.