கர்நாடக மாநிலம் தார்வார் டவுனில் புதிதாக தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த வளாகத்தின் மேல் புதிதாக இரண்டு அடுக்குகள் கட்டப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று அந்த வணிக வளாகத்தின் கட்டிட பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டிருந்தனர். அதோடு அந்த வளாகத்தில் உள்ள கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் இருந்துள்ளனர்.
கர்நாடக கட்டட விபத்து: 3 பேர் பலி, பலர் படுகாயம்! - bangalore
பெங்களூரு: கர்நாடக மாநிலம் தார்வாரில் கட்டுமான பணியிலிருந்த கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், மூன்று பேர் பலியாகினர்.
அப்போது மாலை 4 மணிக்கு திடீரென அந்த கட்டடம் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்துள்ளது. கட்டடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானதால் அப்பகுதி முழுவதும் புழுதி மண்டலமாக காட்சி அளித்தது. அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் வணிகவளாக கடைகளில் இருந்தவர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, விரைந்து வந்த மீட்பு குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் நேற்று 2 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கிய 56 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.