தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘ஏழைகளுக்கு அதிக அளவில் எரிவாயு வழங்கவேண்டும்’- அமைச்சர் தர்மேந்திர பிரதான்! - அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டெல்லி: சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் ஏழைகளுக்கு அதிக அளவில் எரிவாயுகளை வழங்க வேண்டும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

‘ஏழைகளுக்கு அதிக அளவில் எரிவாயு வழங்கவேண்டும்’- அமைச்சர் தர்மேந்திர பிரதான்
‘ஏழைகளுக்கு அதிக அளவில் எரிவாயு வழங்கவேண்டும்’- அமைச்சர் தர்மேந்திர பிரதான்

By

Published : Apr 22, 2020, 4:34 PM IST

நாடு முழுவதிலும் உள்ள எல்பிஜி சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களுடன் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி மூலம் உரையாடினார்.

அப்போது, ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் எரிவாயு விநியோகஸ்தர்கள், பொதுமக்களுக்கு சமையல் எரிவாயுகளை வழங்கிவரும் பணிக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். மேலும், ஏழைகளுக்கு உதவும் வகையில் பிரதம மந்திரி உஜ்வலா திட்டத்தின் மூலம், பயனாளிகளுக்கு பிரதம மந்திரி ஏழைகள் நலத் திட்டத்தின் கீழ் எரிவாயுகளின் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

எரிவாயுகளை விநியோகிக்கும் பணியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வகை செய்வதை பாராட்டிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தொற்று பரவாமல் இருக்க எரிவாயு விநியோகிப்போரும், மற்றவர்களும் முகக் கவசம் அணிவது, அடிக்கடி கை கழுவுதல், தனிநபர் இடைவெளியைக் கடைபிடித்தல் ஆகியவற்றை பின்பற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:உஜ்வாலா யோஜனாவும்... எரிவாயு இல்லாத உருளையும்....!

ABOUT THE AUTHOR

...view details