நாட்டின் மிகப்பெரிய குடிசைப் பகுதியும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடமுமான தாராவியில் புதியதாக 94 கரோனா பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஆக, தாராவியில் கரோனா பாதிப்பாளர்கள் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 20 ஆக உள்ளது. அதிக மக்கள் தொகை நெருக்கம், தகுந்த இடைவெளி கடைப்பிடிக்க முடியாத சூழல் ஆகியவையே தாராவியில் கரோனா பாதிப்பாளர்கள் அதிகரிக்க காரணம் என்று அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.