தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பிரதமர் குறித்து மம்தா தெரிவித்த கருத்தை வாபஸ் வாங்க வேண்டும்' - ஆளுநர் தங்கர்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் மேற்கு வங்க மக்கள், பிரதமர் மோடியை அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா தெரிவித்த கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தங்கர் வலியுறுத்தியுள்ளார்.

Jagdeep Dhankhar slammed Mamata  Mamata asked to withdraw statement  CM Mamata  Governor Jagdeep Dhankhar  மமதா பாணர்ஜி  மேற்கு வங்க ஆளுநர்  மேற்கு வங்க ஆளுநர் ஜெக்தீப் தங்கர்  மம்தா கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தல்
Dhankhar asks Mamata to withdraw comment on PM

By

Published : Jan 21, 2020, 12:18 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் மேற்கு வங்க மக்கள், பிரதமர் மோடியை மாநிலத்திற்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்தார். அக்கருத்துக்கு அம்மாநில ஆளுநர் ஜெக்தீப் தங்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று இது குறித்துப் பேசிய ஜெக்தீப், ”பிரதமர் மோடி ஜனவரி 11, 12 ஆகிய தேதிகளில் மேற்கு வங்கத்தில் இருந்தார். மம்தா பானர்ஜி ஜனவரி 11ஆம் தேதி அவரைச் சந்தித்தார்.

பிரதமர் மோடி மேற்கு வங்க சாலைகளில் கால் வைக்க முடியாது என்று மம்தா தெரிவித்ததாக, அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எவ்வாறு இதனைத் தெரிவிக்க முடியும். இந்தக் கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். மம்தா தனது கருத்தை திரும்பப் பெறவேண்டும்" என்றார்.

முன்னதாக, பிரதமர் மோடி மேற்கு வங்கத்திற்கு வருகைதந்த அன்று, மேற்கூறிய சட்டங்களுக்கு எதிராக ராணி ராஸ்மோனி அவென்யூவில் திரிணாமுல் சாத்திர பரிசாத் நடத்திய உள்ளிருப்புப் போராட்டம்தான் ஆளுநரின் இந்தக் கோபத்திற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஒன்றிணைந்த பெண்கள்!

ABOUT THE AUTHOR

...view details