இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு மாதங்களாக விமானங்கள் இயக்கப்படாமல் இருந்த நிலையில், மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு போக்குவரத்து விமானங்கள் செயல்படலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் சிக்கியிருந்த மக்கள், தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர்.
விமானத்தில் நடுவரிசை இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும்: விமான போக்குவரத்துத் துறை - DGCA to airlines
டெல்லி: விமானங்களில் நடுவரிசை இருக்கைகளை முடிந்த அளவிற்கு காலியாக வைக்குமாறு விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் சார்பாக விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் சார்பில் விமான நிறுவனங்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில், ''விமானங்களில் நடுவரிசை இருக்கைகளை முடிந்த அளவிற்கு காலியாகவே வைக்க வேண்டும். ஒருவேளை நடுவரிசையில் பயணிகளை அமர வைக்க வேண்டிய நிலை வந்தால், அவர்களுக்கு மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கூடுதல் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்'' என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முறையை, ஜூன் 3ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.