அண்மைக் காலங்களில் போயிங் ரக விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகின. இதையடுத்து, அமெரிக்க விமானப் போக்குவரத்து துறை போயிங் ரக விமானங்கள் அனைத்தையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தியது.
இதையடுத்து, இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான (DHCA) டி.ஜி.சி.ஏ., இந்தியாவில் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரெஸ் ஆகிய நிறுவனங்களின் போயிங் ரக விமானங்களின் தரம், செயல்பாடுகளை ஆய்வுசெய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.