தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோழிக்கோடு விமான விபத்து: கடந்தாண்டே விடுக்கப்பட்ட எச்சரிக்கை - ஏர் இந்தியா விமான விபத்து

டெல்லி: கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கடந்தாண்டே எச்சரித்து நோட்டீஸ் அனுப்பியும், அதனைக் கண்டுகொள்ளமால் விமானங்களைத் தொடர்ந்து இயக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

DGCA
DGCA

By

Published : Aug 8, 2020, 4:48 PM IST

துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானம் இரு துண்டுகளாக உடைந்து இரு விமானி உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமான நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகக் கூறி விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கடந்தாண்டே எச்சரிக்கை விடுத்திருந்தது.

கடந்தாண்டு சவுதி அரேபியாவிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிரங்கும்போது சிறு மோதலைச் சந்தித்தது. இந்தச் சம்பவத்தையடுத்து ஆய்வு மேற்கொண்ட விமானப் போக்குவரத்து இயக்குநரக அலுவலர்கள், விமான ஓடுதளப் பாதையில் விரிசல், நீர்த் தேக்கம், ரப்பர் படிமங்கள் உள்ளிட்டவை உள்ளதாக அறிக்கை அளித்துள்ளனர்.

மேலும், இந்தப் பாதுகாப்பு சிக்கலை விரைந்து சீர்செய்து உரிய பதிலளிக்க வேண்டும் என நோட்டீசும் அனுப்பியுள்ளனர். இந்த நோட்டீஸ் கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி அனுப்பப்பட்ட நிலையில், ஓராண்டு கழித்து இந்த விமான விபத்தானது ஏற்பட்டுள்ளது, பாதுகாப்பு குறைபாடு தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

இதையும் படிங்க:கோழிக்கோடு விமான விபத்து: ஆய்வு மேற்கொண்ட மத்திய அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details