தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாளை முதல் சபரிமலை நடை திறப்பு!

திருவனந்தபுரம்: இன்று (அக். 16) மாலை முதல் சபரிமலை திறக்கவுள்ள நிலையில், நாளை (அக். 17) பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

சபரிமலை நடை திறப்பு
சபரிமலை நடை திறப்பு

By

Published : Oct 16, 2020, 10:39 AM IST

நாடு முழுவதும் அதிகரித்து வந்த கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன. போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டது. இதன் பின்னர், பொது மக்களின் வசதிக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, மதவழிபாட்டு தலங்களை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. எனினும், கரோனா பரவலால் சில பெரிய கோவில்கள் திறக்கப்பட்ட வேகத்திலேயே மீண்டும் மூடப்பட்டன. இதனால் பக்தர்கள் அவதியுற்றனர். இந்நிலையில், கேரளாவில் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று(அக்.16) மாலை முதல் திறக்கப்படுகிறது.

பின்னர் நாளை(அக்.17) முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதில் கரோனா தடுப்பு, பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக பம்பை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாளொன்றுக்கு 250 பேர் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

சபரிமலைக்கு வரும் ஐயப்பப் பக்தர்கள் மலையேறுவதற்குத் தகுதியானவர் என்று உறுதியளிக்கும் மருத்துவச் சான்றிதழும் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

இதையும் படிங்க...ஓபிஎஸ் மகன் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு நிராகரிக்கப்படுமா? - அக். 16 இல் தீர்ப்பு

ABOUT THE AUTHOR

...view details