தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சூரிய கிரகணத்தில் சிறப்பு வழிபாடு - ஸ்ரீகாளஹஸ்தியில் குவிந்த பக்தர்கள்

நாடு முழுவதும் இன்று சூரிய கிரகணம் நிகழ்ந்ததையொட்டி, புகழ்பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி காளத்தியப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Srikalahasti
Srikalahasti

By

Published : Dec 26, 2019, 11:59 AM IST

Updated : Dec 26, 2019, 4:05 PM IST

நாடு முழுவதும் இன்று சூரிய கிரகணம் நிகழ்ந்ததையொட்டி, புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களின் நடைகள் சாத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஆந்திரப்பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி காளத்தியப்பர் கோயிலில் சூரிய கிரணத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ராகு-கேது தோஷ பரிகாரத் திருத்தலமாக விளங்கும் இக்கோயிலில் இன்று சிறப்புப் பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.

சூரிய கிரகணத்தில் சிறப்பு வழிபாடு

இந்தக் கோயிலில் உள்ள மூலவர் சிவன் தனது கவசத்தில் 27 நட்சத்திரங்களையும் 9 ராசிகளையும் கொண்டு, சூரிய மண்டலத்தை ஒட்டுமொத்தமாக கட்டுப்படுத்துவதாக பக்தர்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக இன்று சூரிய கிரகணம் நிகழ்ந்தபோது, கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பரிகாரங்கள் செய்துகொண்டனர்.

நாடு முழுவதும் சூரிய மற்றும் சந்திர கிரகண காலங்களில் திறக்கப்படும் ஒரே ஒரு கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

சூரிய கிரகணத்தை ஆட்டுக்கல்லில் உலக்கை வைத்து அறிந்துகொள்ளும் விநோத முறை!

Last Updated : Dec 26, 2019, 4:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details