தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பத்மநாப சுவாமி கோயிலில் 12 பேருக்கு கரோனா - அக்.15 வரை பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு! - ஸ்ரீ பத்மநாப சுவாமி திருவனந்தபுரம்

திருவனந்தபுரம்: ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் முக்கிய அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Sree Padmanabha Swami temple Thiruvananthapuram
Sree Padmanabha Swami temple Thiruvananthapuram

By

Published : Oct 9, 2020, 5:54 PM IST

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் முக்கிய அர்ச்சகர் உள்பட ஊழியர்கள் 12 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறங்காவலர் குழு உறுப்பினர் வி ரத்தீசன் கூறுகையில், "கரோனா ஊரடங்கு காரணாக மூடப்பட்டிருந்த ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயில் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. தற்போது கோயிலின் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், முக்கிய அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால் இன்று (அக்.9) முதல் வரும் 15ஆம் தேதிவரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த வெளிமாநில, மாவட்ட பக்தர்கள்!

ABOUT THE AUTHOR

...view details