உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும்.
இறைவனின் தூதரான இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாள்காட்டியின் 12ஆவது மாதமான துல் ஹஜ்ஜின் 10ஆவது நாளில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் செய்வது. இவ்வாறு செய்து கொண்டாடுவதை பக்ரீத் என்கின்றனர்.
இதனை தமிழில் தியாகத் திருநாள் என்றும் அழைக்கின்றனர். இப்பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து மசூதிக்கு சென்று ஆண்களும், பெண்களும் தனித்தனியே அணிவகுத்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு இன்று (ஆகஸ்ட் 1), நாளையும் (ஆகஸ்ட் 2) பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில் நாட்டில் உள்ள முக்கியமான மசூதிகளில் ஒன்றான டெல்லியின் ஜூம்மா மசூதியில் தகுந்த இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினார்கள்.
முன்னதாக இங்கு வருபவர்களின் வெப்பநிலை தெர்மோமீட்டர் ஹன் உதவியுடன் சோதிக்கப்பட்டது.
டெல்லி பிரபல மஸ்ஜித்தில் இஸ்லாமியர்கள் நமாஸ் இது குறித்து டெல்லி துணை காவல் ஆணையர் சஞ்சய் பாட்டியா கூறுகையில், பக்ரீத் பண்டிகையொட்டி இங்கு பலத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, சிறிய, பெரிய என அனைத்து மசூதிகளும் பாதுகாப்பானதாக உள்ளதா என உறுதி செய்யப்பட்டுவருகிறது” என்றார்.
மசூதியில் தொழுகை நடத்திய இஸ்லாமியர் கூறுகையில், “கரோனா காரணமாக தகுந்த இடைவெளியை கடைபிடித்து செல்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க...'ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வெளிநாட்டு விமான சேவைக்கு நோ சான்ஸ்!'