புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று அதிகாலை நான்கு மணிக்கே நடை திறக்கப்பட்டது. மணக்குள விநாயகர், தங்க கவசமும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மணக்குள விநாயகர் கோயிலில் குவியும் பக்தர்கள்! - Manakkula Ganesha Temple, Puducherry, Ganesh sathurthi
புதுச்சேரி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோயிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து காணப்படுகின்றனர்.
manakkula-ganesha
மேலும் அங்குள்ள உற்சவர் சிலைக்கு வைர சங்கிலி அணிவித்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மணக்குள விநாயகரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவதால், கோயில் நிர்வாகம் சார்பில் காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.