தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா: மகாராஷ்டிராவில் உறுதியானது ஆட்சி மாற்றம்! - காராஷ்டிரா முதலமைச்சர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா

மும்பை: மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார்.

fad
fad

By

Published : Nov 26, 2019, 4:02 PM IST

தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 162 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரே இடத்தில் கூடி தங்களின் பலத்தை நேற்று காட்டினர். இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் பதவியை தேவேந்திர ஃபட்னாவிஸ் ராஜினாமா செய்துள்ளார். துணை முதலமைச்சர் அஜித் பவாரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் இதனை தேவேந்திர ஃபட்னாவிஸ் உறுதிபடுத்தியுள்ளார்.

மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக - சிவசேனா ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவியை சிவசேனா கேட்டது. சிவசேனாவின் கோரிக்கையை பாஜக ஏற்க மறுத்ததால், அவர்களது கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

பின், தனிப்பெரும் கட்சியான பாஜகவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், சிவசேனா ஆதரவு அளிக்காத காரணத்தால் பாஜக ஆட்சி அமைக்க மறுத்தது. இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். சிவசேனா ஆட்சி அமைக்க கால அவகாசம் கேட்க, மூன்றாவது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியும் காலஅவகாசம் கேட்டதால், குடியரசுத் தலைவர் ஆட்சி மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க முயற்சித்தது. இறுதியாக, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உதவியோடு உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி ஏற்பார் என சரத் பவார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக, குடியரசுத் தலைவர் ஆட்சி மகாராஷ்டிராவில் திரும்பப் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு: தப்பிக்குமா ஃபட்னாவிஸ் அரசு?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details