இது குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ' அஜித் பவாருடன் கூட்டணி வைத்தது தவறு எனப் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்குச் சரியான நேரத்தில சரியான பதிலளிப்பேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் பவார், ' நான் என்சிபியில் தான் இருக்கிறேன். என்னை என்சிபியில் இருந்து நீக்கி விட்டார்கள்... என யாராவது சொன்னார்களா அல்லது எங்கேயாவது படித்தீர்களா ' எனக் கேள்வி எழுப்பினார்.