மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் வருகின்ற 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளை அம்மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இதில் முதல்கட்டமாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துவருகின்றனர்.
இதேபோல் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸூம் தனது வேட்புமனுவுடன் பிரமாண பத்திரத்தையும் நேற்று தாக்கல் செய்தார். அதில், மூன்று கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ரொக்கத்தை பொறுத்தவரையில் கையில் பதினேழாயிரத்து ஐந்நூறு ரூபாயும், வங்கியில் எட்டு லட்சத்து 29 ஆயிரத்து 665 ரூபாயும், மனைவி அம்ருதா பெயரில் 99 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.