தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மோடியை விட தேவகவுடா சிறந்த பிரதமர்: ஹெச்.டி.குமாரசாமி - HD Kumaraswamy

பெங்களூரு: பிரதமர் மோடியின் ஐந்து வருட ஆட்சியை விட தேவகவுடாவின் பத்து மாத ஆட்சி சிறந்து என கர்நாடக முதலமைச்சரும் தேவகவுடாவின் மகனுமான ஹெச்.டி. குமாரசாமி கூறியுள்ளார்.

மோடியை விட தேவ கவுடா சிறந்த பிரதமர்: ஹச்.டி. குமாராசாமி

By

Published : Apr 20, 2019, 2:16 PM IST

Updated : Apr 20, 2019, 4:00 PM IST

மதச்சார்பற்ற ஜனதா தளம் (எஸ்) தலைவர் தேவ கவுடா இந்தியாவின் பிரதமராக 10 மாதம் ஆட்சி செய்தார்.

தேவகவுடாவின் மகனும் கர்நாடகாவின் முதலமைச்சருமான குமாரசாமி இது குறித்து கூறுகையில், தனது தந்தை பதவி வகித்தபோது பயங்கரவாத செயல்கள் ஏதும் நடைபெறவில்லை எனவும், நாடு முழுவதும் அமைதியாக இருந்ததாகவும் கூறினார்.

மோடி ஆட்சி குறித்து அவர் கூறுகையில், இன்று மோடி தனது தேர்தல் பரப்புரையின்போது பாலகோட் தாக்குதல் பற்றி கூறி வாக்கு சேகரிக்கிறார்.

இதுவரை எத்தனையோ முறை இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. ஆனால் யாரும் இவரைப்போல அதனை சுய லாபத்துக்காக பயன்படுத்தவில்லை. அதனால் மோடியை விட தேவகவுடாவே சிறந்த பிரதமர் என்று அவர் கூறினார்.

Last Updated : Apr 20, 2019, 4:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details