கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகப் பிரதமரும், பல மாநில முதலமைச்சர்களுக்கும் நிவாரண நிதியைத் தொடங்கியுள்ளனர். இதற்கு மக்கள் தங்களால் முடிந்த பணத்தையும் தருமாறு கேட்டுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை பணத்தை வழங்கிவருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ட்விட்டர் பக்கத்தில், "தனது ஓய்வூதிய பணத்திலிருந்து பிரதமர் நிவாரண நிதிக்கும், கர்நாடகா முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயை தேவகவுடா வழங்கியுள்ளார்" என பதிவிடப்பட்டுள்ளது.