கேரள மாநிலம், கொல்லம் பகுதியில் குடியிருப்பிலிருந்து திடீரென்று மாயமான 6 வயது சிறுமி தேவனந்தாவின் உடல், ஆற்றில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டது. இதையடுத்து, விரிவான விசாரணைக்கு அம்மாநில அரசு சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சிறுமியின் உடலில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.
ஆனால், சிறுமியின் எதிர்பாராத மரணம் குறித்து அவரது குடும்பத்தார் சந்தேகம் இருப்பதாக கூறுகின்றனர். முன்னதாக, குழந்தை அவள் பாட்டியுடன் கோவிலுக்கு செல்லும் போது தொலைந்திருக்கலாம் என சந்தேகமிருந்தது. அதுகுறித்து, 'தேவனந்தாவின் தாத்தா மோகனம் பிள்ளை, வீட்டு வேலையில் அவளின் தாயார் கவனமாக இருந்த ஐந்து நிமிடத்தில்தான் அவள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளாள். எனவே, அவளின் தாயார் ’தேவனந்தா தன் பாட்டியுடன் கோவிலுக்கு சென்றிருக்கலாம்’ என நினைத்துள்ளார்.