பல வணிக நிறுவனங்கள் கரோனா வைரஸ் தொற்றுப் பரவும் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. ஆனால், ஒரு மருந்து நிறுவனமோ மனிதாபிமான அடிப்படையில் வழக்கமான விலையைவிட குறைத்து சானிடைசர் (கிருமிநாசினி) மருந்துகளை ஸ்காட் எடில் பார்மசியா விற்பனை செய்துவருகிறது.
இதுகுறித்து ஸ்காட் எடில் பார்மசியா தொழில்நுட்ப இயக்குனர் வைஷாலி அகர்வால், ஈநாடு நாளேட்டின் செய்தியாளர் வசுந்தரா உடனான உரையாடலின் போது கூறியதாவது, “தங்களது நிறுவனம் உற்பத்தி செலவைவிட குறைந்த விலையிலேயே கிருமிநாசினிகளை (சானிடைசர்) விற்பனை செய்து வருகின்றது.
ஹரியானா சண்டிகரைத் தலைமையிடமாகக்கொண்டு, இமாச்சலப் பிரதேசத்தின் பாடியில் ஐசோபிரைல் ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்களைத் தயாரிக்கும் பிரிவைக்கொண்டுள்ள நிறுவனம் எங்களிடம் உள்ளது. இது 200 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இங்கிருந்து மாதந்தோறும் 10 ஆயிரம் யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதற்கிடையில் கரோனா நெருக்கடி காலத்தில் தேவை அதிகரித்தது. இதனால் பல மருந்துகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நிறுவனம் சானிடைசர் எனப்படும் கிருமிநாசினி தயாரிப்பில் மும்முரம் காட்டியது. துப்புரவுப் பணியாளர்களின் பற்றாக்குறையையும் நாங்கள் கவனத்தில் கொண்டோம்.