கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், முகக்கவசங்களின் தேவையும் தற்போது அதிகரித்துவருகிறது. மருத்துவ முகக்கவசங்கள், என்-95 முகக்கவசங்கள், துணியிலான முகக்கவசங்கள் ஆகியவற்றைத் தாண்டி பல்வேறு வகையிலான, அலங்கரிக்கப்பட்ட முகக்கவசங்களுக்குச் சந்தையில் மதிப்பு கூடுகிறது.
மத்திய, மாநில அரசுகள் வீடுகளை விட்டு வெளியே செல்லும் நபர்கள் கட்டாயம் முகக்கவசங்களை அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. ஆயினும், குழந்தைகள் சிலர் முகக்கவசங்கள் அணிவதை விரும்புவதில்லை. எனவே, இவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கார்ட்டூன் முகங்கள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்களும், விலங்குகள், பொம்மைகள் பொறிக்கப்பட்ட முகக்கவசங்களும் தயாரிக்கப்படுகிறது என்கிறார் சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த வடிவமைப்பாளர் தளி பர்வாணி.