மகாராஷ்டிராவின் கிழக்கு பகுதிகளில் பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் நுழைந்துள்ளன. இதனை மாவட்ட வேளாண்மைத் துறை ஊழியர்கள், பயிர்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் பயிர்கள் செழித்து வளரும் விதர்பா என்ற பகுதியில் உள்ள கிராமங்கள் வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன. இது குறித்து வேளாண்மை இணை இயக்குநர் ரவீந்திர போடலே செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
இது குறித்து அவர் கூறியதாவது;
"அமராவதி மாவட்டத்தில் புகுந்த இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் வர்தா வழியாக சென்று தற்போது நாக்பூர் கடோல் தேசில் பகுதியில் உள்ளன. ஒருங்கிணைந்த மத்திய பூச்சிகள் மேலாண்மை மையத்தின் அலுவலர்கள் ஜலால்கேதா புறவழிச்சாலையின் அருகே உள்ள பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து வருகின்றனர்.
இந்த மையம் பாலைவன வெட்டுக்கிளிகள் குறித்த முக்கியமான தகவல்களை எங்களிடம் அளித்ததோடு அனைத்து கிராமபுற மக்களுக்களிடமும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியது. வெட்டுக்கிளிகள் கூட்டம் அனைத்து வகையான தாவரங்களுக்கும் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. பச்சைத் தாவரங்களை உணவாக உண்ணக்கூடிய இவை ஏக்கர் கணக்கில் பயிர்களை நாசம் செய்யக்கூடிய சக்தி கொண்டவை.
இதற்காக 1200 லிட்டர் தண்ணீரில் பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்து தெளிப்பதால் இதனை தனிப்படட முறையில் என்னால் கவனிக்கப்பட்டுவருகிறது", இவ்வாறு அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபை நிறுவனமான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) கூறியதாவது, உலகில் குடிபெயர்ந்த பூச்சி இனங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் மிகவும் ஆபத்தானவையாகும். மேலும் இது மக்களின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அச்சுறுத்துகிறது என்று கூறியுள்ளது.
இதையும் படிங்க: வெட்டுக்கிளி கூட்டத்தை எதிர்த்து போராடும் மத்தியப் பிரதேசம்