மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாநில காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம், சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய் தத், காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவத்ஸவா, முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கடற்கரை சாலையில் உள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது.