தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த தொழிலாளி: உதவிய துணை வட்டாட்சியர்! - புதுச்சேரியில் சொந்த ஊர் செல்லமுடியாமல் தவித்த தொழிலாளி: உதவிய துணை வட்டாட்சியர்

புதுச்சேரி: மகன் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்த தொழிலாளி சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்துவந்தார். அவரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் சொந்த ஊர் செல்ல துணை வட்டாட்சியர் உதவினார்.

தொழிலாளிக்கு உதவிய துணை வட்டாட்சியர்
தொழிலாளிக்கு உதவிய துணை வட்டாட்சியர்

By

Published : May 2, 2020, 10:07 AM IST

சேலம் மாவட்டம் பச்சைமலை அருகே உள்ள மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரவீந்திரன். இவரது மகன் மோனிஷ் குமார். ஐந்து வயதாகும் சிறுவன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று சிறுவனுக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சேலத்தில் இருந்து புதுச்சேரிக்கு வருவதற்கு வாகன வசதி இல்லாமல் தந்தை தவித்தார்.

சேலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில்தான் சிகிச்சையளிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்து அவசர ஊரதி ஏற்பாடு செய்துகொடுத்தனர். அதன் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சையளிக்காமல் மாத்திரை மட்டும் கொடுத்துவிட்டு மே 19ஆம் தேதி வருமாறு கூறி மருத்துவர்கள் அனுப்பிவைத்தனர்.

பின்னர், ஊர் திரும்ப கையில் பணம் இல்லாமல் தவித்த ரவீந்திரன். மகனை தூக்கிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். ராஜீவ்காந்தி சிலை சதுக்கத்தில் வந்தபோது அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை நிறுத்தி விவரங்களை கேட்டறிந்தனர். ஊரடங்கு காரணத்தினால் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லாத காரணத்தினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகினால் மட்டுமே உதவி கிடைக்கும் என அவர்களை அழைத்துச் சென்றனர்.

தொழிலாளிக்கு உதவிய துணை வட்டாட்சியர்

அங்கு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் துணை வட்டாட்சியர் செந்தில்குமார், சேலத்திற்கு செல்ல நடவடிக்கைகளை எடுத்தார். தனது சொந்த செலவில் வாகன ஏற்பாடு செய்தார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் தங்களால் முடிந்த தொகையை சேர்த்து ரவீந்திரனிடம் கொடுத்து சேலத்திற்கு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: காவல் ஆய்வாளரின் மனிதநேய செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details