அமராவதி: கரோனா தாக்கத்தினால் அல்லல்படும் ஏழை மக்கள் 200 பேருக்கு தன் கையால், கணவர் உதவியுடன் உணவு சமைத்துப் பரிமாறி அசத்தியுள்ளார் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பமுலா புஷ்பஷ்ரிவாணி.
200 பேருக்கு உணவு சமைத்துப் பரிமாறிய துணை முதலமைச்சர்! - உணவு சமைத்து பரிமாறிய துணை முதல்வர்
கரோனா தாக்கத்தினால் அல்லல்படும் ஏழை மக்கள் 200 பேருக்கு தன் கையால், கணவர் உதவியுடன் உணவு சமைத்துப் பரிமாறி அசத்தியுள்ளார் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பமுலா புஷ்பஷ்ரிவாணி.
ஊரடங்கால் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு அரசு துணை நிற்கும் என்பதனை உறுதிசெய்ய உணவின்றித் தவித்துவரும் ஏழைகளுக்கு உணவளிக்க திட்டமிட்டதாகக் கூறிய அவர், அதனைத் தனது கைகளால் சமைத்துப் பரிமாற வேண்டுமென்றும் நினைத்துள்ளார்.
துணை முதலமைச்சர் தன் கணவரான, ஒய்.சி.பி. கட்சியின் நாடாளுமன்ற தலைவரான சத்ருச்ஹாருலா சேர்ந்து இதனை நிறைவேற்றியுள்ளார். இந்தக் காணொலி தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, ஜெகன் அரசுக்கு நற்பெயரை வாங்கி கொடுத்துள்ளதாக நெட்டிசன்கள் சொடுக்கிவருகின்றனர்.