தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சாப்பாடு கூட தரவில்லை..அடித்து கொடுமைப்படுத்துகிறார்கள்'- கதறும் லாலு மருமகள்! - lalu yadav s daughter in law

பாட்னா: சாப்பாடு கூட தராமல் கொடுமைப்படுத்துவதாக லூலுபிரசாத் யாத்வின் மருமகள் ஐஸ்வர்யா ராய் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய்

By

Published : Sep 30, 2019, 5:27 PM IST

ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவுக்கு தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் என இரண்டு மகன்கள், ஏழு மகள்கள் உள்ளனர். கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லாலு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா ராய்

இந்நிலையில் தேஜ்பிரதாப் யாதவுக்கும், பீகார் எம்எல்ஏ சந்திரிகாவின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில், விவகாரத்து கோரி தேஜ் பிரதாப் யாதவ் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனைவிக்கும், தனக்கும் மனப்பொருத்தம் இல்லை என்று அவர் காரணம் கூறியுள்ளார். சொந்த வீட்டில் இருந்தும் ஐஸ்வர்யா ராய் வெளியேறிவிட்டார் எனக்கூறப்படுகிறது. ஆனால் ஐஸ்வர்யா ராய் லாலு வீட்டிலேயே வசித்து வருகிறார். இந்நிலையில் அவர்கள் வீட்டில் தன்னை கொடுமைப்படுத்துவதாக லாலு மருமகள் ஐஸ்வர்யா பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ''எனக்கும், என் கணவருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது என் கணவரின் சகோதரி மிசா பாரதிதான். விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.

ஆனால் விவகாரத்து செய்துவிட்டது போலவே என்னை அவர் நடத்துகிறார். 3 மாதங்களாக மிசா பாரதி என்னை கொடுமைப்படுத்துகிறார். எனக்கு சாப்பாடு தருவதில்லை. எங்கள் வீட்டில் இருந்து தான் சாப்பாடு வருகிறது. கிச்சனுக்குள் செல்ல என்னை அனுமதிப்பதில்லை. என் மாமியாரின் வேலைக்காரர் கதவை அடைத்துவிட்டு சாவியைத் தர முடியாது என மிரட்டுகிறார். என்னை வெளியே தள்ளினார்.

என் கணவருக்கும், சகோதரருக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்துவதும் மிசா பாரதி தான். என் மாமனார் லாலுபிரசாத் துரதிர்ஷ்டவசமாக இங்கு இல்லை. அவரால் மட்டுமே எங்கள் பிரச்னையைத் தீர்க்க முடியும்'' என்றார்.

கணவருடன் ஐஸ்வர்யா ராய்

ஆனால் ஐஸ்வர்யாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள மிசா பாரதி, ''ஒவ்வொரு கணவன், மனைவி பிரச்னையிலும் சகோதரிகள் இழுக்கப்படுவது சகஜம் தான். அவர்கள் பிரச்னையில் நான் தேவையில்லாமல் இழுக்கப்படுகிறேன். கடந்த சில மாதங்களாக மூன்று, நான்கு முறை மட்டுமே பாட்னாவிற்கு சென்றுள்ளேன்.

அதுவும் வழக்கு விஷயங்களுக்காக நீதிமன்றத்துக்குத்தான் சென்றிருக்கிறேன். அதனால் என்மீதான இந்த புகார் பொய்யானது ''என்றார்.

இதையும் படிங்க:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: சிதம்பரத்திற்கு பிணை வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details