புதுச்சேரி மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி புதுச்சேரி சாரம் பகுதியில் இன்று நடைபெற்றது. இந்தப் பேரணியை முதலமைச்சர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பேரணியை தொடங்கிவைத்த முதலமைச்சர்! - டெங்கு காய்ச்சல் தடுப்பு பேரணி
புதுச்சேரி: சுகாதாரத் துறை சார்பில் சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணியை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.
இதில், மருத்துவக்கல்லூரி செவிலி மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்தனர். அப்போது, நகரப் பகுதிகளில் உள்ள குளம், நீர்நிலைகளில் டெங்கு கொசு உற்பத்தி செய்யும் கிருமிகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தனர்.
மேலும், ஏடிஸ் கொசுக்கள் உருவாகாமலிருக்க தேங்காய் மட்டைகளை நிமிர்த்தி நீர் தேங்காத வகையில் அடுக்கி வைக்க வேண்டும். நெகிழிக் குப்பைகளைத் தவிர்க்க வேண்டும் ஆகிய கருத்துகளை இந்த விழிப்புணர்வுப் பேரணியில் வலியுறுத்தினர்.