காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பது தொடர்பாக ’நோட்பந்தி கி பாத்’ என்ற பெயரில் தொடர்ச்சியான காணொலிகளை தன்சமூக வலைதளப் பக்கங்களில்பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள இரண்டாவது காணொலியில், “500, 1000 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்ததன் நோக்கம் என்ன? கோடிக்கணக்கான மக்களை வங்கி வாசலில் காத்திருக்கச் செய்ததா? இதனால் நீங்கள் கூறியபடி கருப்புப் பணம் ஒழிந்ததா? இந்த நடவடிக்கையின் காரணமாக ஏழை இந்திய மக்களுக்கு ஏதேனும் நன்மைகள் நடந்தனவா? இதுவரை அதுபோன்ற எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை!
மாறாக இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இந்தியாவிலுள்ள, மத்திய அரசிற்கு நெருக்கமான 50 பெரு முதலாளிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வது போன்ற நடைமுறைகளே, அதாவது பெரு முதலாளிகளுக்கான நன்மைகளே அதிகரித்துள்ளன.