புதுச்சேரி: பஞ்சாலைகளை மூடும் முடிவை அரசு திரும்ப பெற வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று(அக்.1) நடைபெற்றது.
ஏ.எப்.டி, சுதேசி, பாரதி மூன்று பஞ்சாலைகளை மூடும் அறிவிப்பை திரும்ப பெறக்கோரியும், மூன்று பஞ்சாலைகளை தொடர்ந்து இயக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுச்சேரி பிரதேச குழு சார்பில் சுதேசி மில் முன்பாக நேற்று(அக்.1) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜனநாயக வாலிபர் சங்க புதுச்சேரி பிரதேச தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார்.