மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 22 பேர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர். இதில், 16 பேரின் ராஜிநாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். இதன்மூலம், கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனிடையே, மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்த வழக்கில், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே, கமல்நாத் தனது முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தனது ட்விட்டர் பக்கத்தில், ஜனநாயகத்தை விடுதி அரசியல் வீழ்த்தியுள்ளதாகப் பதிவிட்டுள்ளார்.