இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட தாக்குதல் காரணமாக, அசாதாரண சூழல் நிலவி வருகிறது. சீனாவுக்கு எதிராக நாட்டில் பல இடங்களில் போராட்டங்களும், சீனப் பொருள்களை உடைத்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சமயத்தில் மக்கள் 'மேட் இன் இந்தியா' பொருள்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், மேட் இன் இந்தியா பொம்மைகளுக்குத் தேவை அதிகரித்துள்ளதாக, அதிதி டாய்ஸின் இணை இயக்குனர் அரவிந்த் ஜலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கிட்டத்தட்ட 80 முதல் 90 விழுக்காடு பொம்மைகள் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது, மேட் இன் இந்தியா பக்கம் மக்கள் திரும்பியுள்ளதால், உள்நாட்டு சந்தை வளர்ச்சியடைவது மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.