தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தோசை சுடும் ஒருவர் அமெரிக்க துணை அதிபராகியுள்ளார் - மகிழ்ச்சி தெரிவித்த சசி தரூர் - idlis and dosas

டெல்லி: இட்லியை அனுபவித்து உண்டு தோசை சுடும் ஒருவர் அமெரிக்க துணை அதிபரானதில் மகிழ்ச்சி என மக்களவை உறுப்பினர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ்

By

Published : Nov 8, 2020, 4:12 AM IST

இந்திய வம்சாவழி தமிழ்நாட்டை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக பெண் ஒருவர் துணை அதிபராக தேர்வாகியுள்ளதால் உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், இட்லியை அனுபவித்து உண்டு தோசை சுடும் ஒருவர் அமெரிக்க துணை அதிபரானதில் மகிழ்ச்சி என மக்களவை உறுப்பினர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவை உறுப்பினர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய ஜனநாயகவாதிகள் அனைவரும் ராகுல் காந்தியின் கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் அவருடன் ஒன்றிணைந்து ஜோ பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம். தனிப்பட்ட அளவில், இட்லியை அனுபவித்து உண்டு தோசை சுடும் ஒருவர் அமெரிக்க துணை அதிபரானதில் மகிழ்ச்சி" என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details