கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு எத்தனை நபர்கள் ஆன்டிபாடிகளை தங்களது உடலில் பெற்றுள்ளனர் என்பதைக் கண்டறிய டெல்லியில் செராலாஜிக்கல் (உடலில் உள்ள நீர்மங்கள் குறித்தது) கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதல்கட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது கட்ட கணக்கெடுப்பு முடிவடைந்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பின்போது ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரையில், 15 ஆயிரம் பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டது. அதில் 25 விழுக்காடு மாதிரிகள் 18 வயதிற்குக் கீழ் உள்ளவர்களிடமும், 50 விழுக்காடு மாதிரிகள் 18 முதல் 40 வயது வரை உள்ளவர்களிடமும் பெறப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள 25 விழுக்காடு மாதிரிகள் 40 வயதிற்கு மேல் உள்ளவர்களிடமிருந்தும் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பின்போது டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர் ஜெயின், டெல்லியில் வாழ்ந்து வரும் 35 விழுக்காடு பேர் ஆன்டிபாடிகளை உருவாக்கியிருப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.