தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி சுகாதார அமைச்சருக்கு மீண்டும் கரோனா பரிசோதனை! - டெல்லி சுகாதார அமைச்சர் கரோனா பரிசோதனை

டெல்லி: சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு இரண்டாவது முறையாக கரோனா பரிசோதனை நடைபெற உள்ளது.

அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்
அமைச்சர் சத்யேந்தர் ஜெயின்

By

Published : Jun 17, 2020, 9:29 AM IST

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர் உடனடியாக டெல்லி ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று (ஜூன்16) கரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வெளியானது.

இதில் அவருக்கு கரோனா பாதிப்பில்லை என முடிவுகள் வந்தது. எனி்னும் அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளது.

இதனால் அவருக்கு இன்றும் (புதன்கிழமை) மீண்டும் கரோனா பரிசோதனை நடைபெற உள்ளது.

இது குறித்து சத்யேந்திர ஜெயின் ட்விட்டரில், “காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அவ்வப்போது எனது நிலை குறித்த விவரங்களை வெளியிடுவேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், “தங்களின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள்” என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவுரை கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலும் கடந்த வாரம் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: கோவிட்-19 பாதிப்பாளர்களை மரணத்திலிருந்து காக்கும் ஸ்டீராய்டு மருந்துகள்!

ABOUT THE AUTHOR

...view details