தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'டெல்லியில் கோவிட்-19 கட்டுக்குள் உள்ளது'- ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தகவல் - டெல்லி

டெல்லி: டெல்லியில், கோவிட்-19 கட்டுக்குள் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ. ராகவ் சதா கூறியுள்ளார்.

Delhi's COVID-19 situation Arvind Kejriwal Raghav Chadha Delhi coronavirus situation டெல்லி கோவிட்-19 நிலைமை அரவிந்த் கெஜ்ரிவால் ராகவ் சதா டெல்லி கரோனா வைரஸ்
Delhi's COVID-19 situation Arvind Kejriwal Raghav Chadha Delhi coronavirus situation டெல்லி கோவிட்-19 நிலைமை அரவிந்த் கெஜ்ரிவால் ராகவ் சதா டெல்லி கரோனா வைரஸ்

By

Published : Jun 29, 2020, 10:02 AM IST

டெல்லி ராஜீந்தர் நகர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ராகவ் சதா ஞாயிற்றுக்கிழமை (ஜூன்28) கூறியதாவது:-

கரோனா வைரஸை ஒரு கையால் எதிர்கொள்ள முடியாது. ஆகவே முதலமைச்சர் கெஜ்ரிவால் உதவி கேட்டார். இதனை எதிர்த்து ஒற்றுமையுடன் போராட வேண்டும்.

கூட்டு முயற்சியால் இதனை வெல்லலாம். டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. எங்களின் கோரிக்கையை தொடர்ந்து இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை உதவி கிடைத்தது.

இதுபோல் எங்களின் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றிவருகிறது.

நாங்கள் அனைவரும் தொற்றுநோய்க்கு எதிராக கூட்டாக போராடுகின்றனர். ஜூலை இறுதிக்குள் டெல்லியில் பாதிப்பு ஐந்து லட்சத்து 50 ஆயிரமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக போராட அரசு உறுதி பூண்டுள்ளது. மாநிலத்தில் சோதனை அதிகரித்துவருகிறது. மேலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனிப்பில் டெல்லியில் கோவிட்19 நிலைமை கட்டுக்குள் இருப்பதாக பாஜகவினர் கூறுகின்றனரே என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த சதா, “அது நகைப்புக்குரியது” என பதிலளித்தார்.

'டெல்லியில் கோவிட்-19 கட்டுக்குள் உள்ளது'- ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தகவல்

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “அது உண்மையெனில் அவரை நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்ப வேண்டும். எந்தவொரு அமைப்போ, தனிநபரோ கரோனா வைரஸை வெல்ல முடியாது” என்றார்.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு ஆயிரத்து 889 கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, தேசிய தலைநகரில் மொத்த பாதிப்பாளர்கள் எண்ணிக்கை 83 ஆயிரத்து 77 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு ஆயிரத்து 633 பேர் இறந்துள்ளனர்.

இதையும் படிங்க: 'கடல்வாழ் உயிரினங்கள் குறித்து கவனம் தேவை'- மத்திய அரசுக்கு ஜெய்ராம் ரமேஷ் எச்சரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details