நாட்டின் தலைநகர் டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) காற்றின் தரம் மோசமான நிலையை எட்டியது. காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் இதுகுறித்து தெரிய வந்துள்ளது.
அந்த ஆய்வில், டெல்லி லோதி சாலையில் காற்றின் தரச் சுட்டெண் முறையே, நண்பகல் 2.05 மற்றும் இரவு 10 மணிகளில் 203 மற்றும் 214 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவிலும் காற்றின் தரம் மோசமாக இருந்தது. அங்கு காற்றின் தரச் சுட்டெண் 319ஆக பதிவாகியிருந்தது.
டெல்லியின் மற்றப் பகுதிகளான சாந்தினி சவுக், மதுரா சாலை ஆகியப்பகுதிகளிலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்தது.
டெல்லியில் மீண்டும் காற்று மாசுபாடு! - டெல்லியில் மீண்டும் காற்று மாசுபாடு
டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மீண்டும் அபாய நிலையை எட்டியுள்ளது.

Delhi's air quality remains in 'very poor' category
நேற்றைய தினத்தைப் போன்று இன்றும் டெல்லியின் சிலப் பகுதிகளில் காற்று மாசுபாடு தொடர்கிறது. பொதுமக்கள் சுவாசிக்கும் காற்றின் தரச் சுட்டெண்ணை மத்திய அரசின் தர ஆய்வு நிறுவனமான காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி நிறுவனம், 0-50 வரை நன்று, 51-100 வரை திருப்தி, 101-200 நடுத்தரம், 201-300 மோசம், 301-400 மிக மோசம், 401-500 அபாயம் என வரையறை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி? கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு